வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ


மகாகமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டுச் செய்தியை விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

நன்றி - Thanthi TV

மகாமகப் பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் - வீடியோ




மாசு இல்லா மகாமகம்!வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்தியாவின் மாபெரும் விழா மகாமகம். கும்பகோணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேசுகிறார்! (வீடியோ)
Posted by Sakthi Vikatan on Friday, January 29, 2016

நன்றி- சக்தி விகடன் 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

எழில் கொஞ்சும் குடந்தை காவிரிப் படித்துறைகள்

கும்பகோணத்தின் எழில் கொஞ்சும் காவிரிப் படித்துறைகள் இவை. ஒவ்வொன்றின் பெயரையும் சொல்ல இயலுகிறதா? என அறிந்தவர்கள் முயலுங்கள். மேலும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் விரைவில்...













மகாமக திருவிழா என்ற நீர்மேலாண்மை திருநாள் - தி இந்து தமிழ் நாளிதழில் சிறப்புக் கட்டுரை

பிப்-2,  இன்றைய தி இந்து தமிழ் நாளிதழ் திருச்சி பதிப்பில் கடைசி பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை கும்பகோணத்தின் இலக்கிய தொடர்புகளைப் பற்றிப் பேசுகிறது.

மகாமகத் திருவிழா நீர்மேலாண்மையின் திருநாளாக எவ்விதம் அமைகிறது என்பதைப் பற்றியும், மகாமகம் குறித்த அயல்நாட்டினர் பதிவுகளையும் பற்றிப் பேசுகிறது.

வாய்ப்பிருப்பின் படித்துப் பாருங்கள்.

கட்டுரையாசிரியர் - இல.சொ. சத்தியமூர்த்தி ( sathiyamurthy2000@gmail.com)


நன்றி - தி இந்து தமிழ் நாளிதழ்


திங்கள், 1 பிப்ரவரி, 2016

மகாமகத்தையொட்டி 150 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் - 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்

பிப்-1, மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எவ்வித நோய்தொற்றுக்கும் ஆளாகாமல் நீராடும் விதமாக சுகாதாரத்துறையும், அரசும் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை 150 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறையின் மாநில இணை இயக்குனர் டாக்டர் சேகர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விரிவான செய்திகளுக்கு- இன்றைய தினகரன் நாளிதழ்

மகாமகத்தை முன்னிட்டு 36 இடங்களில் தற்காலிக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன

பிப்-1, மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 36 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்நிலையங்களை எஸ்.பி மயில்வாகனன் நேற்று (ஜன-31) திறந்து வைத்தார்.


விரிவான செய்திகள் - இன்றைய தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்.

கும்பாபிஷேக தரிசனம் - 18 திருக்கோயில்கள் வீடியோ

குடந்தையில் மகாமகத்தை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளது.  இதோ 18 திருக்கோயில்களின் கும்பாபிஷேக தரிசனம் தங்களுக்காக...

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் (சாக்கோட்டை)




அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்




அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்




அருள்மிகு ஆதிவராக பெருமாள் திருக்கோயில்




அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்




அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்




அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்




அருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோயில்



அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்




அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்



அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்



அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்




அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை


நன்றி- இந்து சமய அறநிலையத்துறை

மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியை இலவசமாக பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.



ஞாயிறு, 31 ஜனவரி, 2016

அருள்மிகு நாகேஸ்வரர் மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக்கோயில்களில் கொடிமரம் பிரதிஷ்டை

ஜன-29, குடந்தை அருள்மிகு நாகேஸ்வரசுவாமி மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக்கோயில்களில் பழமையான மற்றும் சற்று சேதமடைந்த கொடிமரங்களுக்குப் பதிலாக முறையே 3லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரங்கள் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனையொட்டி மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விரிவான செய்திக்குறிப்புக்கு தினகரன்

பக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயிற்சி - நீரேற்று நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு

ஜன-31, மகாமகப் பெருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ஆடுதுறை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை தஞ்சை மாவட்ட  சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் ஓய்வு பெற்ற தமிழக பொதுப்பணித்துறை இணை இயக்குனர் டாக்டர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

விரிவான செய்திகளுக்கு இன்றைய தினகரன் நாளிதழ் (திருச்சி பதிப்பு)

பி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங்களை மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கிறது.

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் சார்பில் மகாமகக் குளம் உள்ளிட்ட 5 இடங்களில் 3ஜி சேவைக்கான புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் கும்பகோணம் காவிரி நதிப் படுகை தொலைத் தொடர்பு மாவட்ட பொது மேலாளர் எஸ். லீலாசங்கரி தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திக்குறிப்புக்கு தினமணி