சனி, 6 பிப்ரவரி, 2016

விவேகானந்தர் குடந்தைக்கு விஜயம் செய்த விழா

ஆடுதுறை, பிப்-3, கும்பகோணம் பகுதியில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்த நாள் விழா நடந்தது.

வீரத்துறவி விவேகானந்தர் கடந்த 1897ல் சிகாகோவில் சொற்பொழிவாற்றிய பின் தாயகம் திரும்பிய போது பிப்ரவரி 3ம் தேதி கும்பகோணம் வந்தார். பக்தர்களின் சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கியிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க வேதாந்த பணி என்னும் சொற்பொழிவாற்றினார்.

அப்போது தான் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு வழங்கினார்.

சோழமண்டலம் விவேகானந்த சேவா சங்கம் சார்பில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்கள், படங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


விரிவான செய்திக்குறிப்பு  - தினமலர் நாளிதழ் (06.02.2016)

Welcome to Mahamaham! - வருக! வருக! மகாமகப் பெருவிழாவிற்கு...

Thanjavur District administration welcomes everyone to the Mahamaham 2016 festival.


மரம் நடும் திட்டத்திற்காக மகாமகம் ரோட்டரி சங்கத்திற்கு வேன் - சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

பிப் - 5 , கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் , கும்பகோணம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.  இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு வாகன வசதி செய்து தரும்பொருட்டு சிட்டி யூனியன் வங்கி ரூ. 5 லட்சம் மதிப்பிலான வேனை வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கலந்து கொண்டு வேனின் சாவியை ரோட்டரி சங்க தலைவர் கண்ணனிடம் வழங்கினார். அந்த வாகனத்தை வங்கியின் தலைவர் பாலசுப்பரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிட்டியூனியன் வங்கி திட்ட பொதுமேலாளர் பாலசுப்பரமணியன், மகாமக ரோட்டரி சங்க சாசன தலைவர் முகமது உசேன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விரிவான செய்தி குறிப்புக்கு - தினத்தந்தி (05.02.2016), திருச்சி பதிப்பு

பிளாஸ்டிக் இல்லா மகாமகம் - கல்லூரி மாணவ மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி

பிப்-4, மகாமகப் பெருவிழாவையொட்டி பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா மகாமகம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் மாஸ் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலர் ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் சாஸ்த்ரா பல்கலையில் இருந்து புறப்பட்டு காந்தி பூங்காவைச் சென்றடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புத்துறைப் பேராசிரியர்கள் வெங்கட்ராமன், பிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

விரிவான செய்திக்குறிப்பு - தின இதழ் நாளிதழ் (05-02-2016)

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

3000 இரயில்வே காவல்துறையினர் மகாமகத்தினையொட்டி பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இரயில்வே ஐ.ஜி தகவல்

மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரயில்வே துறை செய்து வருகிறது. 3000 இரயில்வே காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்

விரிவான செய்திகள் வீடியோ இணைப்பில்

நன்றி  - Thanthi TV, Puthiya Thalaimurai


மகாமகத் திருவிழாவிற்கு 2800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் தகவல் - வீடியோ

மகாமகத் திருவிழாவினை முன்னிட்டு 2800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் இறுதி கட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் தகவல்

வீடியோ - Thanthi TV


மகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ


மகாகமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டுச் செய்தியை விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

நன்றி - Thanthi TV

மகாமகப் பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் - வீடியோ




மாசு இல்லா மகாமகம்!வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்தியாவின் மாபெரும் விழா மகாமகம். கும்பகோணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேசுகிறார்! (வீடியோ)
Posted by Sakthi Vikatan on Friday, January 29, 2016

நன்றி- சக்தி விகடன் 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

எழில் கொஞ்சும் குடந்தை காவிரிப் படித்துறைகள்

கும்பகோணத்தின் எழில் கொஞ்சும் காவிரிப் படித்துறைகள் இவை. ஒவ்வொன்றின் பெயரையும் சொல்ல இயலுகிறதா? என அறிந்தவர்கள் முயலுங்கள். மேலும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் விரைவில்...













மகாமக திருவிழா என்ற நீர்மேலாண்மை திருநாள் - தி இந்து தமிழ் நாளிதழில் சிறப்புக் கட்டுரை

பிப்-2,  இன்றைய தி இந்து தமிழ் நாளிதழ் திருச்சி பதிப்பில் கடைசி பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை கும்பகோணத்தின் இலக்கிய தொடர்புகளைப் பற்றிப் பேசுகிறது.

மகாமகத் திருவிழா நீர்மேலாண்மையின் திருநாளாக எவ்விதம் அமைகிறது என்பதைப் பற்றியும், மகாமகம் குறித்த அயல்நாட்டினர் பதிவுகளையும் பற்றிப் பேசுகிறது.

வாய்ப்பிருப்பின் படித்துப் பாருங்கள்.

கட்டுரையாசிரியர் - இல.சொ. சத்தியமூர்த்தி ( sathiyamurthy2000@gmail.com)


நன்றி - தி இந்து தமிழ் நாளிதழ்