வியாழன், 18 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழா : சிறப்பு ரயில்கள்

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை ஒட்டி பயணிகள் வசதிக்காக 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய தினங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண் – 07676)

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மதியம் 3.15 மணிக்கும்அங்கிருந்து மயிலாடுதுறைக்கு மாலை 4.25 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில் திருவெரும்பூர், பூதலூர், தஞ்சாவூர், திட்டை, பண்டாரவாடை, சுந்தரபெருமாள்கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் - 07681)

மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 5.30 மணிக்கும் தஞ்சாவூருக்கு 6.30 மணிக்கும் சென்றடையும். அதேபோல் தஞ்சாவூரில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 8.50 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 9.15 மணிக்கும்சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (வண்டிஎண்-07686)

தஞ்சாவூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மதியம் 1.25 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 2.45 மணிக்கும் சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண்-07689)


மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 4.15 மணிக்கும் தஞ்சாவூருக்கு 5.25 மணிக்கும் சென்றடையும். அதே போல் தஞ்சாவூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 7.50 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 8.50 மணிக்கும் சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (வண்டி எண்-07695)

மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 10.33மணிக்கும் தஞ்சாவூருக்கு11.20 மணிக்கும் சென்றடையும்.
கும்பகோணம் மகாமத்தை ஒட்டிவரும் 24ம் தேதி வரை கும்பகோணம் வழியாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில்கூடுதலாக 2ம் வகுப்பு 4 பொது பெட்டிகளும் 2ம் வகுப்பு 1 லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.


விரிவானசெய்திகளுக்கு – தினமலர், தினகரன் 18.2.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக