திங்கள், 8 பிப்ரவரி, 2016

மகாமகப் பணிகள் -07-02-2016மகாமகத் திருவிழாவில் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம். பிப் -20 ல் நடக்கிறது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்  வரும் பிப்ரவரி 20ந் தேதி நடைபெற இருக்கிறது.

பொதுவாக மாசிமகத்திருவிழா கொடியேற்றத்திலிருந்து 8-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். கடந்த 1968-ல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின் போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களின் கூட்டம் காரணமாக அதன்பிறகு, ஆண்டு தோறும் மாசிமகத் திருவிழாவின் போது மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது.

தற்போது நடைபெற உள்ள மகாமகப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு தேரோட்டம் நடத்த வேண்டுமென பெரும்பாலான பக்தர்கள் விரும்பியதால், வரும் 20ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக கும்பேஸ்வரர் கோயில் தேருக்கு சாரம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ். தினகரன்

ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் புதிய சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம்

பிப்-7, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம் நடைபெற்றது.

சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கு விழா, ஒரு தலத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கான விழாவாகும். ஏழூர் பல்லக்கை தரிசித்தால் ஏழு பிறப்புக்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்,
சாக்கோட்டை அமிர்தகலச நாதர் திருக்கோயில்,
தாராசுரம் ஆத்மநாதசுவாமி திருக்கோயில்,
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்,
கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்,
மேலக்காவேரி கைலாசநாதசுவாமி திருக்கோயில்,
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.

ஆகியவை இத்தலத்திற்குரிய சப்தஸ்தானத் தலங்களாகும். பழுதடைந்திருந்த இப்பல்லக்கு பக்தர்களின் உதவியால் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. வெள்ளோட்டத்திற்கு முன்னால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மகாமத்தினையொட்டி பிப் 12 அமிர்த தீர்த்தம் கொண்டு செல்வது, 17ந் தேதி இரட்டைவீதி புறப்பாடு ஆகியவை இப்பல்லக்கில் நடைபெறுகின்றன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன், தினத்தந்தி, தி இந்து தமிழ் நாளிதழ்.

நகருக்குள் நெருக்கடியைத் தவிர்க்க பகல் நேரங்களில் லாரிகளை நகருக்குள் இயக்க கட்டுப்பாடு

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பகல் நேரங்களில் லாரிகளை இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பக்தர்களின் எண்ணிக்கையையும், மகாமகப் பணிகளையும் கருத்தில் கொண்டு லாரிகள் மற்றும் வணிகம் தொடர்பாக பயன்படுத்தும் சரக்கு வாகனங்கள் பிப் 07 முதல் பிப் 23 வரை நாள் தோறும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கிக் கொள்ளவும், ஏற்றிக் கொள்ளவும் வேண்டும்.

தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகம் - 07-02-2016 - பத்மநாபன் தெரு - ஜெயவீர ஆஞ்சநேயர்

கும்பாபிஷேக தரிசனம்-07-02-2016 பாலக்கரை விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
கும்பாபிஷேக தரிசனம்-07-02-2016- டபீர்படித்துறை-சித்திவிநாயகர்-மீனாட்சி சுந்தரேசுவரர்