திங்கள், 15 பிப்ரவரி, 2016

மகாமகம் - லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் சமாளிக்க முழு ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

பிப் 14 - மகாமகப் பெருவிழாவையொட்டி, தீர்த்தவாரி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

கும்பகோணம் மகாமகப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மகாமகக் குளத்தை ஒட்டி அமைந்துள்ள காசி விசுவநாதர் சுவாமி கோயில், அபிமுகேசுவரர் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பிறகு ஆட்சியர் தெரிவித்ததாவது

விழாவையொட்டி மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மகாமகக் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கும்பகோணத்தின் பல்வேறு இடங்கள், அனைத்து கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை கூடுதல் டி ஜி.பி திரிபாதி இங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காத்து வருகிறார். மேலும் மகாம கக் குளம் உள்பட கும்பகோணம் முழுவதும் சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள்  அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மகாமகம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு  தினமணி, தினமலர்,தினத்தந்தி 15.2.2016 (திருச்சி பதிப்பு)

பிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மகாமகம் நீராடல்

காவிரி - சக்கரபடித்துறை
கும்பேஸ்வரர் ஆலயம்
பொற்றாமரைக் குளம்

மகாமகக் குளம்Photo Courtesy: A. Veeraramani


பிப்ரவரி-14_மகாமகம் Gallery_ நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்

 

பிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும்_2


அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்

தாராசுரம் மார்க்கெட் எதிரில்...மூர்த்தி கலையரங்கம்
பிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும்_1

புனரமைக்கப்பட்டுள்ள சேய்குளம் மாலை வேளையில் ...மகாமகக் கலையரங்க நிகழ்வு...நகரப் பேருந்து நிலையம் எதிரில் ... 
பிப்ரவரி-15, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    பூதவாகனம், கிளிவாகனம்.

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 வெள்ளி பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    பூதவாகனம் ,கிளி வாகனம்.

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    பூதவாகனம்,கிளிவாகனம்.

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    பூத வாகனம், சிம்ம வாகனம்.


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
    பூத வாகனம், சிம்ம வாகனம்.

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    இந்திர வாகனம்
7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
     காலை 8.00மணிக்கு
 பல்லக்கில்பெருமாள்வீதிபுறப்பாடு.
     இரவு 7.00 மணிக்கு
    வெள்ளிசூர்யபிரபையில்வீதிபுறப்பாடு.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
     காலை 9.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
    சூரியப்ரபை                                 
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 வெள்ளிபல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
    வெள்ளிசூர்யப்ரபை
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
    சந்திரப்ரபை
11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு

    சந்திரப்ரபை