சனி, 20 பிப்ரவரி, 2016

மகாமகம் Gallery - திருவீதியுலா


கார் பார்க்கிங் நிறுத்துமிடம்

கார் பார்க்கிங் நிறுத்துமிடம்


1.அசூர் தற்காலிக பேருந்து நிலையம் அருகில்.

2.கொரநாட்டுக் கருப்பூர் தற்காலிக பேருந்து நிலையம் அருகில்.

3.செட்டிமண்டபம் தற்காலிக பேருந்து நிலையம் அருகில்.

4.எம்.ஆர்.எம். அரிசி ஆலை நீடாமங்கலம் ரோடு அருகில்.

5.சீனிவாசநகர் (நகராட்சி பூங்கா அருகில்.)

6.நாட்டார் தலைப்பு தற்காலிக பேருந்து நிலையம் அருகில்.

7.அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம்.

8.நகர பேருந்து நிலையம்.


9.புற நகர பேருந்து நிலையம்.

மகாமகம் - கும்பகோணம் நகர பொது மக்களுக்கான இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்


 கும்பகோணம் நகர பொது மக்களுக்கான இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்
1.   மேற்கு காவல் நிலைய குடியிருப்பு அருகில் உள்ள காலியிடம்

2.   சிவமுருகன் லாட்ஜ் பின்புறம்

3.   டாக்டர் மூர்த்தி ரோடு ( வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம்)

4.   மதகடிதெரு, வேல்முருகன்திரையரங்கம்

5.   எம்.ஆர்.எஸ் லாடஜ் அருகில் காலியிடம் (ஸ்ரீகுமார் கார்டு அருகில்)

6.   நேடிவ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் – மேலக்காவிரி

7.   ஏ.ஆர்.ஆர். மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் – சௌராஷ்டிரா சபா மைதானம்

8.   சிறியமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – ஸ்ரீநகர்காலனி

9.   ஹோட்டல் சாரா எதிர்புறம் காலியிடம் – மைதீன்நிலம், பெருமாண்டி பஞ்சாயத்து

10. நால்ரோடு – கிறிஸ்து சபா மைதானம்

11. கிரைஸ்ட் திகிங் இணைப்பு கட்டிட விளையாட்டு மைதானம்

12. செல்லம் நகர்


13. சாஸ்த்ரா எதிர்புறம்

மகாமகப் பெருவிழா - தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் விவரம்.

தற்காலிக பேருந்து நிறுத்தம்

1.   மேலச்சத்திரம் பேருந்து நிலையம் – நாகேஸ்வரன் ஐடிஐ எதிர்புறம்
பயன்பாடு – தஞ்சாவூர் திருவையாறு செல்ல பேருந்து ஏறுமிடம்

2.  வலையப்பேட்டைபேருந்துநிலையம் – பிரிஸ்ட்பள்ளி அருகில்
பயன்பாடு – தஞ்சாவூர் திருவையாறு செல்ல பேருந்து ஏறுமிடம்

3.   அசூர்பேருந்துநிலையம் – அசூர்
பயன்பாடு – சென்னை செல்ல பேருந்து ஏறுமிடம்


4.   கொரநாட்டுக்கருப்பூர் பேருந்துநிலையம் – கொரநாட்டுக்கருப்பூர்
பயன்பாடு – தஞ்சாவூர் திருவையாறு செல்ல பேருந்து இறங்குமிடம்


5.   உள்ளூர் பேருந்து நிலையம் – மூப்பனார்நகர் அருகில் - உள்ளூர்
பயன்பாடு – சென்னை பயணிகள் இறங்குமிடம்

6.   செட்டிமண்டபம் பேருந்து நிலையம் – செட்டிமண்டபம்
பயன்பாடு – மயிலாடுதுறை காரைக்கால் பயணிகள் ஏறுமிடம், இறங்குமிடம்


7.   பழவத்தான் கட்டளை பேருந்துநிலையம் – நாட்டார் தலைப்பு, பட்டு ஸ்கூல் பின்புறம் - பழவத்தான் கட்டளை

பயன்பாடு – திருவாரூர் ,மன்னார்குடி பயணிகள் ஏறுமிடம் , இறங்குமிடம்.

மகாமகப் பெருவிழா - தீர்த்தவாரி இடம் மற்றும் நேரம்

தீர்த்தவாரி இடம் மற்றும் நேரம்

12 சைவ திருக்கோயில்கள்

இடம் – மகாமககுளம்.
நேரம் – 22-02-2016 நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்குள்.

5 வைணவ திருக்கோயில்கள்

இடம் – காவிரி ஆற்றில் சாரங்கபாணி படித்துறை

நேரம் – 22-02-2016 நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்குள்

மகாமகம்- வானில் ஓர் அணிவகுப்பு - அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை அவர்களின் சிறப்புக் கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில்

மகாமகம் வானவியல் ரீதியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு. சொல்லப் போனால் அதை வைத்துத்தான் ‘மகா' மகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அண்டவெளியில் சூரியன், பூமி, சந்திரன், வியாழன் கிரகம், மக நட்சத்திரம் ஆகிய ஐந்தும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கும்.

இவற்றில் மக நட்சத்திரத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மக நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் மகாமகம் கொண்டாடப்படுகிறது. அந்த நட்சத்திரம் பூமியிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அது ரொம்ப ரொம்ப தூரம். மக நட்சத்திரம் வானில் சிம்ம ராசியில் உள்ளது. வானில் நம் தலைக்கு மேலே உள்ள பகுதியை விஞ்ஞானிகள் கிழக்கு மேற்காக 12 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவற்றை ராசிகள் என்றும் கூறலாம். இந்த ராசிகள் வழியே தான் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி முதலான கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன.

பூமியைச் சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது என்பதை நாம் அறிவோம். பவுர்ணமியன்று பூமி நடுவே அமைந்திருக்க சூரியன் ஒரு புறமும் சந்திரன் மறு புறமும் அமைந்திருக்கும். சந்திரன் மீது விழும் வெயில் தான் நமக்கு முழு நிலவாகத் தெரிகிறது.

ஆண்டுதோறும் மாசி மாதத்துப் பவுர்ணமியன்று சந்திரனுக்கு கிட்டத்தட்ட நேர் பின்னால் மக நட்சத்திரம் அமைந்திருக்கும். ஆகவே மாசி மகம் கொண்டாடப்படுகிறது.

வியாழன் கிரகமும் சூரியனைச் சுற்றி வருவதாகும். அது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த அளவில் வியாழன் கிரகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்துப் பவுர்ணமியன்று கிட்டத்தட்ட சந்திரனுக்கு நேர் பின்னால் அமைந்ததாகிறது. இந்த ஆண்டு அவ்விதம் நிகழ்கிறது. அதாவது அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அமைந்தவையாகின்றன. இது வானவியல் நிகழ்வாகும். இப்படியான அணிவகுப்பைத் தான் நாம் மாசி மகப் பெருவிழாவாகப் பன்னெடுங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். இது பண்டைக் காலத்தில் தமிழர்கள் வானவியல் நிகழ்வுகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

கட்டுரையை முழுமையாகப் படிக்க தி இந்து தமிழ் நாளிதழ் வலைத்தள இணைப்பு

மகாமகம் Gallery - மகாமகத் திருக்குளத்தைச் சுற்றி-02

மகாமகம் Gallery - அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருவீதியுலா

நாள் - 19-02-2016

மகாமகம் 2016 - அவசர மருத்துவ உதவி தொடர்பு எண் மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண்கள்மகாமகம் Gallery_மகாமக திருக்குளத்தைச் சுற்றிலும் ...


மகாமகம் Gallery_ அருள்மிகு இராமசுவாமி திருவீதியுலா


மகாமகம் Gallery_அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்


நான்கு மகாமகங்களுக்குப் பிறகு இன்று அருள்மிகு ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் மகாமக தேரோட்டம் (5 திருத்தேர்கள்)


மகாமகம்_Gallery_Digital Artist_2


மகாமகம் Gallery_அன்புடன் வரவேற்கும் தாராசுரம் பேரூராட்சி

குடந்தையின் நுழைவாயிலாக விளங்கும் தாராசுரம் பேரூராட்சியில் மகாமகப் பெருவிழா பக்தர்களை வரவேற்கும் விதம் எழிலுற வடிவமைக்கப்பட்டிருக்கும் யானை சிலைகள்


மகாமகம்_Gallery_ எழில் கொஞ்சும் பொற்றாமரைக்குளம்

மகாமகம் Gallery_ திருவீதியுலா (அனுமந் வாகனம்)

அருள்மிகு இராமசுவாமி திருவீதியுலா


அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருவீதியுலா


அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருவீதியுலா


அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் சுவாமி திருவீதியுலா


அருள்மிகு வரதராஜப் பெருமாள்  சுவாமி திருவீதியுலா அருள்மிகு நாகேஸ்வரன் சுவாமி திருவீதியுலா
அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருவீதியுலா


அருள்மிகு ஆதி வராகப்பெருமாள் சுவாமி திருவீதியுலா


அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருவீதியுலா
நாள்- 18.02.2016