செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கும்பகோணம் அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில் - கும்பாபிஷேக அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்

கும்பகோணம் தேசிகேந்திர சுவாமிகள் மடம் வீர சைவ பெரிய மடத்துக்குச் சொந்தமான அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

அதற்கான அழைப்பிதழும், நிகழ்ச்சி நிரலும் இணைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இந்த முறை 10 நாட்கள் உற்சவம்.

மகாமகத் திருவிழா காணும் திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது.


இத்திருக்கோயிலில் இதற்குமுன், 1933 மகாமகத்தின் போது பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்று, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

போதிய நிதி மற்றும் மண்டகபடிதாரர்கள் கிடைக்கப் பெறாததால் அதன்பின் வந்த மகாமகங்களிலும், மாசி மகங்களிலும் ஏக தின உற்சவம் மட்டுமே நடைபெற்றது.

இந்த மகாமகத்திற்கு கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் இணைந்து 10 நாட்கள் உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மகாமகத்திற்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 13ந் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.


விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ்

கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய அரசு பேருந்துகள்

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய பேருந்துகள் இயக்கும் துவக்க விழா நேற்று நடந்தது.

சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 701 புதிய பேருந்துகளையும், 65 புதிய மினி பேருந்துகளையும் தொடங்கி வைத்தார். இதில் கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

விரிவான செய்திக்குறிப்புக்கு - தினமணி, தினமலர் (09.02.2016)

நாதன்கோயிலில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி திங்கள் கிழமை உதய கருட சேவை நடைபெற்றது.

உதய கருட சேவையைத் தொடர்ந்து கோயில் எதிரே உள்ள நந்தி புஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வார் புனித நீராடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)

தை அமாவாசையை முன்னிட்டு காவிரியாற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
மகாமகம் - காவல்துறை சிறப்பு ஏற்பாடு - குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

மகாமகப் பெருவிழாவையொட்டி காவல்துறையால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை 

கும்பகோணம் நகருக்குள் சென்று வர இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை என போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் டி.எஸ்.பி. மகேசன் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் நிலையங்கள் மூலம் எந்தெந்த தெருவில் எத்தனை வீடுகள் உள்ளன. வீடுகளில் உள்ளோரின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் துறை சார்பில் குடியிருப்போருக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் தெரிவித்துள்ளார்.

120 இடங்களில் கண்காணிப்பு

மகாமகத்தினை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த காவல்துறை சார்பில் இரும்பினால் ஆன தடுப்புகள் 2000 தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை மகாமகக் குளம், பொற்றாமரைக்குளம், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சாலைகள், மற்றும் காவிரி ஆறு சாலைகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். மேலும் 120 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)