செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

மகாமகம் - காவல்துறை சிறப்பு ஏற்பாடு - குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

மகாமகப் பெருவிழாவையொட்டி காவல்துறையால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை 

கும்பகோணம் நகருக்குள் சென்று வர இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை என போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் டி.எஸ்.பி. மகேசன் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் நிலையங்கள் மூலம் எந்தெந்த தெருவில் எத்தனை வீடுகள் உள்ளன. வீடுகளில் உள்ளோரின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் துறை சார்பில் குடியிருப்போருக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் தெரிவித்துள்ளார்.

120 இடங்களில் கண்காணிப்பு

மகாமகத்தினை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த காவல்துறை சார்பில் இரும்பினால் ஆன தடுப்புகள் 2000 தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை மகாமகக் குளம், பொற்றாமரைக்குளம், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சாலைகள், மற்றும் காவிரி ஆறு சாலைகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். மேலும் 120 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக