வியாழன், 18 பிப்ரவரி, 2016

மகாமகம் Gallery - இரட்டை வீதியுலா காட்சிகள்_01








மகாமகப் பெருவிழா : சிறப்பு ரயில்கள்

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை ஒட்டி பயணிகள் வசதிக்காக 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய தினங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண் – 07676)

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மதியம் 3.15 மணிக்கும்அங்கிருந்து மயிலாடுதுறைக்கு மாலை 4.25 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில் திருவெரும்பூர், பூதலூர், தஞ்சாவூர், திட்டை, பண்டாரவாடை, சுந்தரபெருமாள்கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் - 07681)

மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 5.30 மணிக்கும் தஞ்சாவூருக்கு 6.30 மணிக்கும் சென்றடையும். அதேபோல் தஞ்சாவூரில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 8.50 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 9.15 மணிக்கும்சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (வண்டிஎண்-07686)

தஞ்சாவூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மதியம் 1.25 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 2.45 மணிக்கும் சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண்-07689)


மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 4.15 மணிக்கும் தஞ்சாவூருக்கு 5.25 மணிக்கும் சென்றடையும். அதே போல் தஞ்சாவூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 7.50 மணிக்கும் மயிலாடுதுறைக்கு 8.50 மணிக்கும் சென்றடையும்.

மயிலாடுதுறை – தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (வண்டி எண்-07695)

மயிலாடுதுறையில் இருந்து 18.2.2016 மற்றும் 19.2.2016 ஆகிய இரு தினங்களும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு 10.33மணிக்கும் தஞ்சாவூருக்கு11.20 மணிக்கும் சென்றடையும்.
கும்பகோணம் மகாமத்தை ஒட்டிவரும் 24ம் தேதி வரை கும்பகோணம் வழியாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில்கூடுதலாக 2ம் வகுப்பு 4 பொது பெட்டிகளும் 2ம் வகுப்பு 1 லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.


விரிவானசெய்திகளுக்கு – தினமலர், தினகரன் 18.2.2016

மகாமகம் Gallery - கலைநிகழ்ச்சிகள் - காவடி ஆட்ட கலைஞன்




நாள் : 14-02-2016

மகாமகம் Gallery_ அறுபத்து மூவர் வீதி உலாவும் பிற காட்சிகளும்




















பிப்ரவரி-18, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்


1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
      
  காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
  
   இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         அதிகார நந்தி, காமதேனு.

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
      
  காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 வெள்ளி பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         கைலாச வாகனம் ஏகாசனம்.

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     
  காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         யானை வாகனம், சிம்ம வாகனம்.

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
    
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         காம தேனு- கற்பகவிருட்சம்.


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      
  காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
         நந்தி வாகனம், காம தேனு.

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
     
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         இந்திர வாகனம்
7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
     
   காலை 8.00 மணிக்கு
வெள்ளி பல்லக்கில் வீதி புறப்பாடு.
     இரவு 7.00 மணிக்கு
         வெள்ளி ஹனுமந்த வாஹனம்.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
     
  காலை 9.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         வெள்ளி அனுமார் வாஹனம்.
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
     
  காலை 8.00 மணிக்கு
 வெள்ளி பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         ஹனுமந்த வாஹனம்.
       
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
     
  காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
        ஹனுமந்த வாஹனம்.

11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
    
    காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
               ஹனுமந்த வாஹனம்.




மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 குழுக்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை

பிப் 17- மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 குழுக்கள் மூலம் தண்ணீர் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர்  விஜயராஜ்குமார் தெரிவித்தார். மேலும்,

இந்த குழுக்கள் உதவி நீர் பகுப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டு குழுக்களை சேர்ந்தவர்கள் வேன்கள் மூலம் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தூரம் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் சென்று குடிநீரை பரிசோதனை செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

விரிவான செய்திகளுக்கு - தினத்தந்தி 17-2-2016

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மொபைல் ஏ.டி.எம் அறிமுகம்

பிப் 17 - கும்பகோணத்தில் மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மொபைல் ஏ.டி.எம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

இதில் வங்கியின் திருச்சி நிர்வாக பிரிவு துணை பொதுமேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல மேலாளர் அருணாசலம் கணேசன், வங்கியின் கும்பகோணம் கிளையின் முதன்மை மேலாளர் முரளி, பஜார் கிளை முதன்மை மேலாளர் சத்யகணேஷ், எஸ். எம். இ கிளை மேலாளர் வெங்கட்ராமன் மற்றம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விரிவான செய்திகளுக்கு - தினத்தந்தி 17-2-2016