வியாழன், 28 ஜனவரி, 2016

மகாமகத்திருவிழா- மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

மகாமகத்திருவிழா சிறப்புறவும், விவசாயிகளின் கோரிக்கைப்படி பாசனத்திற்காகவும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது.
இன்று (28.01.2016) முதல் 25.02.2016 வரை வினாடிக்கு 6000 கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட இருக்கிறது.
விரிவான செய்திகளுக்கு…

மகாமகம் சிறப்பு லோகோ வெளியீடு

maha logo.jpg
மகாமக விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அடையாள சின்னம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போல சிறப்பு தபால் அட்டை மற்றும் அஞ்சல் உறையும் வெளியிடப்பட உள்ளன.
விரிவான தகவல்களுக்கு

திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்-கும்பாபிஷேகம்

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 18வது சிவத்தலமான, இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 29.01.2016 அன்று நடைபெற இருக்கிறது. யாகசாலை நிகழ்வுகள் இன்று துவங்கின.
Thirukarukavur
திருக்கோயிலின் வலைத்தளம் – http://garbaratchambigaitemple.org

பட்டீஸ்வரம்-அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (துர்க்கை ஸ்தலம்) கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 23-வது திருத்தலமாக விளங்கும் பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 29-01-2016 (தை 15) அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற இருக்கிறது.
யாகசாலை நிகழ்வுகள் 24.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கின. நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
pattees_invitation2

மகாமக விழா கோயில்களில் ஜனவரி 24 பந்தல்கால் முகூர்த்தம்

மகாமகப் பெருவிழாவுடன் தொடர்புடைய முக்கிய சிவாலயங்களான ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் கோயில்களிலும், வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி கோயில்களிலும் இன்று காலை 7 மணிக்கு மேல் பந்தல்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு, மகாமகப் பணிகள் தொடங்கின.
விரிவான செய்திக்குறிப்புகள் ஜனவரி 24 நாளிதழ்களில்

கும்பகோணத்தில் பிப் 18 முதல் 20 வரை அகில பாரத துறவியர் மாநாடு

கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு நடக்கும் அகில பாரத துறவியர் மாநாடுக்கான அழைப்பிதழை, குடந்தையில் உள்ள சைவ, வைணவத் தலங்களிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் சமர்ப்பித்து சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நேற்று நடைபெற்றது.
விரிவான செய்திக்குறிப்புக்கு- தி இந்து தமிழ் நாளிதழ்

கும்பகோணத்தைப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்-கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பு மனு

கோயில் நகரமான கும்பகோணத்தைப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பு , மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் மனு அளித்துள்ளது.
விரிவான தகவல் குறிப்புக்கு  – தி இந்து தமிழ் நாளிதழ் (23.01.2016)

மகாமகப் பணிகள்

தற்காலிக கழிவறைகள் கட்டுமானம்_சாக்கோட்டை_Jan 23
DSC_0427
மீட்கப்படும் ஆயிகுளம்_Jan 22
maha work

குடந்தை Panaroma_1

அரசினர் கலைக்கல்லூரி12484832_10205809021924919_963888550418589155_o
தாராசுரம் கோயில்
Darasuram Pano

Mahamaham Tank Pano

January 24
மணல் நிரப்பும் பணிகள் பெரும்பங்கு முடிவடைந்தது.
January 22
maha pano_01_22_2
January 21maha pano_01_22
January 17
DSC_0359-PANO
January 12
DSC_0320-PANO
January 10DSC_0285-PANO
January 4DSC_0235-PANO

மகாமகம் புனிதநீர்(தீர்த்தம்) முன்பதிவு ஆரம்பம்

இந்துசமய அறநிலையத்துறையின் மகாமகம்-2016 வலைத்தளத்தில் ரூபாய்.150 செலுத்தி மகாமகம் புனிதநீருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
உங்களது செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வீட்டு முகவரியை கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்து ரூபாய் 150 செலுத்திவிட்டால் தங்களது முகவரிக்கே புனிதநீர் அனுப்பி வைக்கப்படும்.

வண்ணமயமான மகாமகம் 2016 காலண்டர்-இந்துசமய அறநிலையத்துறை வெளியீடு



இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மகாமகம் 2016-ஐ முன்னிட்டு வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. குடந்தை திருக்கோயில்களில் ரூ.100க்கு இக்காலண்டர் கிடைக்கிறது.

விரிவான செய்திக்குறிப்பு தினமணியில்