ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-14 மகாமகம் Gallery_ கொடியேற்றமும் காலை நிகழ்வுகளும்

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு இன்று குடந்தையில் உள்ள வைணவத் தலங்களில் கொடியேற்றம் நடைபெற்றது.

அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்


அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்மகாமக குளத்தில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர்ப்பகுப்பாய்வு

கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை குளத்தின் நீரை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களுக்கும் 20 சுகாதார ஆய்வாளர்கள் நான்கு கரைகளுக்கும் 4 சுகாதார் ஆய்வாளர்கள் , தயார் நிலையில் 5 பேர் என மொத்தம் 29 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர்.

சுத்தத்தின் அளவு குறைவாக இருப்பின் , உடனடியாக குளத்தில் குளோரின் பவுடர் போடப்படும் என்றார்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளர்கள் ஆர். சரவணன் மற்றும் டி.ராஜேந்திரன்.

மேலும், தேவைப்பட்டால் ஹைப்போகுளோரைடு திரவம் மூலமும் தண்ணீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படுகிறது.

விரிவான செய்திகளுக்கு - தினமணி 14.2.2016 (திருச்சி பதிப்பு)

கும்பகோணத்தில் அரசு பொருட்காட்சி தொடக்கம் - சிறப்பு தபால் தலை வெளியீடு

பிப் 14 - மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் அரசு பொருட்காட்சியை , அமைச்சர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு , செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் , அரசு பொருட்காட்சி கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்தார். தமிழக வீட்டுவசதி மற்றும் வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் பொருட்காட்சியை தொடங்கி வைத்தும் நலத் திட்ட உதவி வழங்கினார்.

மகாமகத்தை முன்னிட்டு தபால்துறை சார்பில் சிறப்பு தபால்கவர் மற்றும் தபால் அட்டையை, திருச்சி மத்திய மண்டல தபால்துறை இயக்குனர் நடராஜன் வெளியிட அமைச்சர் வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

பொருட்காட்சியில் அரசுத் துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை எம்.பி பாரதிமோகன், எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், நகராட்சி தலைவர் ரத்னாசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ஆர. ஓ சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விரிவான செய்திகளுக்கு - தினமலர், தினகரன், தினமணி 14.2.2016 (திருச்சி பதிப்பு)

குடந்தையில் 16ம் தேதி அறுபத்து மூவர் புறப்பாடு இரட்டை வீதி வலம்

பிப் ; 14 மகாமகம் பெருவிழாவை ஒட்டி ஆதிகும்பேஸ்வரர் கோயில் சார்பில் வரும் 16ம் தேதி அறுபத்து மூவர் புறப்பாடு இரட்டை வீதி வலம் நடைபெற இருக்கிறது.

அன்று காலை 8 மணியளவில்  விநாயகர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் வெள்ளி பல்லக்கிலும், மங்களாம்பிகா, ஆதி கும்பேஸ்வர ர் புதிய கண்ணாடி பல்லக்கிலும், 63 நாயன்மார்கள் மஞ்சங்களிலும் இரட்டை வீதிவலம் புறப்பாடு நடக்கிறது.

இது குறித்து திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் கூறியதாவது  - நாயன்மார்கள் கி.பி 400 - கி.பி 1000 ம் ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிறந்த சிவனடியார்கள். 1968ம் ஆண்டு நடந்த மகாமகம் திருவிழா போது திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் முதன்முறையாக நாயன்மார்களின் 63 உலோக சிலைகளும் செய்து கொடுக்கப்பட்டு மாசி மகத்தின் 4வது நாளிலும், ஒவ்வொரு மகாமகம் திருவிழாவின் 4வது நாளிலும் வீதியுலா நடைபெறுகிறது என்றார்.

விரிவான செய்திகளுக்கு ; தினமலர் 14.2.2016 (திருச்சி பதிப்பு)

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் 20 ம் தேதி பஞ்சரத திருத்தேரோட்டம்

பிப் 14 - மகாமகம் பெருவிழாவை ஒட்டி ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு வருப் 20 ம் தேதி 5 தேர்களின் பஞ்சரத தேரோட்டம் நடைபெற இருக்கிறது.எனவே 5 தேர்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மங்களாம்பிகை கைங்கர்ய சபாவினர் 5 தேர்களையும் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோயில் செயல் அலுவலர் கவிதா, தக்கார் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விரிவான செய்திகளுக்கு ; தினமலர் ,தினகரன் - 14.2.2016 (திருச்சி வெளியிடு)

பிப்ரவரி-13, மகாமகம் Gallery _ மாலை நிகழ்வுகள் மகாமக நீராடல்
கலை நிகழ்ச்சிகள் - நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்
கலை நிகழ்ச்சிகள் - ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில்

அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்


பிப்ரவரி-13, மகாமகம்_Gallery_ மகாமக திருக்குள நீராடல்Photo Courtesy: A. Veeraramani

பிப்-13, மகாமகம் Gallery_கொடியேற்றம்

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்.அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில்.
Photo Courtesy : A. Veeraramani

பிப்ரவரி-14, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்

      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     சேஷ வாகனம்

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்

      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     சேஷ வாகனம் ,கமல வாகனம்

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     சூரிய பிரபை ,சந்திர பிரபை

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     சேஷ வாகனம், கமல வாகனம்


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்

      காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
     சேஷ வாகனம், கமல வாகனம்

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்

      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர வாகனம்

7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 த்வாஜாரோஹனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர விமானம்

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 த்வாஜாரோஹனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர விமானம்
    

9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 த்வாஜாரோஹனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர விமானம்

10. அருள்மிகு சக்ரபாணி கோயில்

     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 த்வாஜாரோஹனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர விமானம்

11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்

     காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை
 த்வாஜாரோஹனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
     இந்திர விமானம்