ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

கும்பகோணத்தில் அரசு பொருட்காட்சி தொடக்கம் - சிறப்பு தபால் தலை வெளியீடு

பிப் 14 - மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் அரசு பொருட்காட்சியை , அமைச்சர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு , செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் , அரசு பொருட்காட்சி கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்தார். தமிழக வீட்டுவசதி மற்றும் வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் பொருட்காட்சியை தொடங்கி வைத்தும் நலத் திட்ட உதவி வழங்கினார்.

மகாமகத்தை முன்னிட்டு தபால்துறை சார்பில் சிறப்பு தபால்கவர் மற்றும் தபால் அட்டையை, திருச்சி மத்திய மண்டல தபால்துறை இயக்குனர் நடராஜன் வெளியிட அமைச்சர் வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

பொருட்காட்சியில் அரசுத் துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை எம்.பி பாரதிமோகன், எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், நகராட்சி தலைவர் ரத்னாசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ஆர. ஓ சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விரிவான செய்திகளுக்கு - தினமலர், தினகரன், தினமணி 14.2.2016 (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக