ஞாயிறு, 31 ஜனவரி, 2016

அருள்மிகு நாகேஸ்வரர் மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக்கோயில்களில் கொடிமரம் பிரதிஷ்டை

ஜன-29, குடந்தை அருள்மிகு நாகேஸ்வரசுவாமி மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக்கோயில்களில் பழமையான மற்றும் சற்று சேதமடைந்த கொடிமரங்களுக்குப் பதிலாக முறையே 3லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரங்கள் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனையொட்டி மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விரிவான செய்திக்குறிப்புக்கு தினகரன்

பக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயிற்சி - நீரேற்று நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு

ஜன-31, மகாமகப் பெருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ஆடுதுறை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை தஞ்சை மாவட்ட  சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் ஓய்வு பெற்ற தமிழக பொதுப்பணித்துறை இணை இயக்குனர் டாக்டர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

விரிவான செய்திகளுக்கு இன்றைய தினகரன் நாளிதழ் (திருச்சி பதிப்பு)

பி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங்களை மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கிறது.

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் சார்பில் மகாமகக் குளம் உள்ளிட்ட 5 இடங்களில் 3ஜி சேவைக்கான புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் கும்பகோணம் காவிரி நதிப் படுகை தொலைத் தொடர்பு மாவட்ட பொது மேலாளர் எஸ். லீலாசங்கரி தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திக்குறிப்புக்கு தினமணி