புதன், 10 பிப்ரவரி, 2016

Mahamaham - Revised All Route Map & Local Devotees Entry Map - திருத்தப்பட்ட போக்குவரத்து ஏற்பாடு வரைபடம் மற்றும் பக்தர்களுக்கான பாதைகள் வரைபடம்

ALL ROUTE MAP


To Download High Resolution PDF Click Here


KUMBAKONAM LOCAL DEVOTEES ENTRY ROUTE TO MAHAMAHAM TANKTo Download High Resolution PDF Click Here

To Download Mahamaham Android Application Click Here

மகாமகத்தையொட்டி குடந்தை நகரில் முதன் முதலாக வைபை ஹாட்ஸ்பாட் வசதி - பிஎஸ்.என்.எல் அறிமுகம்

மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரில் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் வைபை ஹாட்ஸ்பாட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் வைபை வசதி உள்ள அனைத்து மொபைல் மற்றும் லேப்படாப் வழியாக இணைய வசதியைப் பெறமுடியும்.

முதல் 15 நிமிடங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு ஆன்லைன் ரீசார்ஜ் அல்லது கூப்பன் மூலம் தொடரந்து இணைப்பில் இருக்க முடியும்.

முக்கிய இடங்களில் அமைக்கப்படும் வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு சேவை மையங்கள் பிப்ரவரி 20,21,22 ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் இயங்கும்.

விரிவான தகவல் குறிப்பு - தினகரன், தினமலர்.

மகாமகக் குளத்தில் பாதுகாப்பாக நீராட ஏற்பாடு - பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகவல்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட வரும் இரண்டு வழிகளிலும், குளத்திலிருந்து வெளியேறும் இரண்டு வழிகளிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், குளத்தினுள் இறங்கி பார்வையிட்ட ஆட்சியர், குளத்திற்கு சோதனை அடிப்படையில் விடப்படும் தண்ணீர், எந்த அளவு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் இரு கேன்களில் தண்ணீரை எடுத்துச் சென்று பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மகாமகக் குளம் மட்டுமன்றி பொற்றாமரைக் குளத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விரிவான செய்திக்குறிப்பு - தினத்தந்தி, தினமணி.

மகாமக திருவிழா பாதுகாப்பு பணியில் 25,000 காவலர்கள் - மத்திய மண்டல ஐ.ஜி தகவல்

கும்பகோணம்- சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில்  மகாமக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்துநிலை காவல்துறை அதிகாரிகளுக்குமான வழிகாட்டும் நெறிமுறைகள் கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி தகவல் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்புப் பணியில் 25,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பொதுமக்களிடம் மனிதநேயத்துடனும், பக்தர்களிடமிருந்து எவ்வித புகார்களும் எழா வண்ணம் செயலாற்ற வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன், தினமலர்

தயார் நிலையில் ஹெலிபேடுகள்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட வரும் இரண்டு வழிகளிலும், குளத்திலிருந்து வெளியேறும் இரண்டு வழிகளிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், குளத்தினுள் இறங்கி பார்வையிட்ட ஆட்சியர், குளத்திற்கு சோதனை அடிப்படையில் விடப்படும் தண்ணீர், எந்த அளவு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் இரு கேன்களில் தண்ணீரை எடுத்துச் சென்று பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மகாமகக் குளம் மட்டுமன்றி பொற்றாமரைக் குளத்தையும் ஆட்சியர் ஆய்வு

விரிவான செய்திக்குறிப்பு -தினமணி நாளிதழ்

மகாமகப் பெருவிழாவிற்கு பிப்-13ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு

மகாமகப் பெருவிழா பிப்-13 ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 விவரங்கள் பின்வருமாறு

பிப்ரவரி 13

திருச்சியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.10 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பகல் 11 மணிக்கு சென்றடையும்.

தஞ்சாவூரில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு மாலை 6.45 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் “டெமு” ரயில்கள் ஆகும். இவற்றில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

பிப்ரவரி 14,15,15

வருகிற 14,15,16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் - மயிலாடுதுறை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விபரம் பின்வருமாறு

தஞ்சாவூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு மயிலாடுதுறைக்கு பகல் 11.25 மணிக்கு சென்றடையும்

மயிலாடுதுறையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு பகல் 11.50 மணிக்கு சென்றடையும்

தஞ்சாவூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு சென்றடையும்

மயிலாடுதுறையில் இருந்து மாலை 3..35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட ரயில்கள் தஞ்சாவூர்-மயிலாடுதுறை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.


விரிவான செய்திக்குறிப்புக்கு - தினத்தந்தி