புதன், 10 பிப்ரவரி, 2016

மகாமகத்தையொட்டி குடந்தை நகரில் முதன் முதலாக வைபை ஹாட்ஸ்பாட் வசதி - பிஎஸ்.என்.எல் அறிமுகம்

மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரில் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் வைபை ஹாட்ஸ்பாட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் வைபை வசதி உள்ள அனைத்து மொபைல் மற்றும் லேப்படாப் வழியாக இணைய வசதியைப் பெறமுடியும்.

முதல் 15 நிமிடங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு ஆன்லைன் ரீசார்ஜ் அல்லது கூப்பன் மூலம் தொடரந்து இணைப்பில் இருக்க முடியும்.

முக்கிய இடங்களில் அமைக்கப்படும் வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு சேவை மையங்கள் பிப்ரவரி 20,21,22 ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் இயங்கும்.

விரிவான தகவல் குறிப்பு - தினகரன், தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக