ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

குடந்தையில் 16ம் தேதி அறுபத்து மூவர் புறப்பாடு இரட்டை வீதி வலம்

பிப் ; 14 மகாமகம் பெருவிழாவை ஒட்டி ஆதிகும்பேஸ்வரர் கோயில் சார்பில் வரும் 16ம் தேதி அறுபத்து மூவர் புறப்பாடு இரட்டை வீதி வலம் நடைபெற இருக்கிறது.

அன்று காலை 8 மணியளவில்  விநாயகர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் வெள்ளி பல்லக்கிலும், மங்களாம்பிகா, ஆதி கும்பேஸ்வர ர் புதிய கண்ணாடி பல்லக்கிலும், 63 நாயன்மார்கள் மஞ்சங்களிலும் இரட்டை வீதிவலம் புறப்பாடு நடக்கிறது.

இது குறித்து திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் கூறியதாவது  - நாயன்மார்கள் கி.பி 400 - கி.பி 1000 ம் ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிறந்த சிவனடியார்கள். 1968ம் ஆண்டு நடந்த மகாமகம் திருவிழா போது திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் முதன்முறையாக நாயன்மார்களின் 63 உலோக சிலைகளும் செய்து கொடுக்கப்பட்டு மாசி மகத்தின் 4வது நாளிலும், ஒவ்வொரு மகாமகம் திருவிழாவின் 4வது நாளிலும் வீதியுலா நடைபெறுகிறது என்றார்.

விரிவான செய்திகளுக்கு ; தினமலர் 14.2.2016 (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக