திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் புதிய சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம்

பிப்-7, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம் நடைபெற்றது.

சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கு விழா, ஒரு தலத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கான விழாவாகும். ஏழூர் பல்லக்கை தரிசித்தால் ஏழு பிறப்புக்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்,
சாக்கோட்டை அமிர்தகலச நாதர் திருக்கோயில்,
தாராசுரம் ஆத்மநாதசுவாமி திருக்கோயில்,
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்,
கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்,
மேலக்காவேரி கைலாசநாதசுவாமி திருக்கோயில்,
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.

ஆகியவை இத்தலத்திற்குரிய சப்தஸ்தானத் தலங்களாகும். பழுதடைந்திருந்த இப்பல்லக்கு பக்தர்களின் உதவியால் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. வெள்ளோட்டத்திற்கு முன்னால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மகாமத்தினையொட்டி பிப் 12 அமிர்த தீர்த்தம் கொண்டு செல்வது, 17ந் தேதி இரட்டைவீதி புறப்பாடு ஆகியவை இப்பல்லக்கில் நடைபெறுகின்றன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன், தினத்தந்தி, தி இந்து தமிழ் நாளிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக