வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

கும்பகோணம் மகாமக குளத்தில் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் 4 உயர் மின் கோபுரங்களில் அமைப்பு.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் இரவு நேரத்திலும் புனித நீராடும் வகையில் 240 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குளத்தின் கிழக்கு படித்துறையில் இறங்கி குளித்துவிட்டு மேற்கு படித்துறை வழியாக மேலே ஏறிச் செல்ல வேண்டும். 

தென் பகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வடபகுதியில் முக்கியப்பிரமுகர்கள், மையப்பகுதியில் பொதுமக்கள் நீராடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பதற்காக 7 இடங்களில் ஸ்பிரிங்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இரவு நேரத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள  4 உயர் மின் கோபுரங்களில் அமைப்பு அதிக ஒளி தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.கூடுதல் விவரங்களுக்கு      தி இந்து (12-02-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக